பாட்டு பாடவா…. 100 வயதைக் கடந்த தந்தைக்காக பாடல் பாடிய மகனின் வைரல் வீடியோ!

நூற்றாண்டை கடந்த அப்பாவுக்காக பாடல் பாடிய முதியவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குடும்ப உறுப்பினர்களுக்கிடையே உள்ள பிணைப்பை படம் பிடிக்கும் ஒவ்வொரு வீடியோக்களுமே கண்டிப்பாக அனைவரது மனதையும் கவரும். அண்ணன், தங்கை…

நூற்றாண்டை கடந்த அப்பாவுக்காக பாடல் பாடிய முதியவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குடும்ப உறுப்பினர்களுக்கிடையே உள்ள பிணைப்பை படம் பிடிக்கும் ஒவ்வொரு வீடியோக்களுமே கண்டிப்பாக அனைவரது மனதையும் கவரும். அண்ணன், தங்கை பாசம், அப்பா மகனின் பாசம், அம்மா குழந்தையின் பாசம் போன்ற வீடியோக்கள் எப்போது லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கும். அந்த வகையில், பார்ப்பவர்களை உணர்ச்சிவசப்பட வைக்கும் வகையிலான வீடியோ ஒன்று ட்விட்டரில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

100 வயதைக் கடந்த தன் அப்பாவுக்காக வயதான மகன் பாடும் பாடல் ஒன்று வைரலாகி உள்ளது. அந்தப் பதிவில் 100 வயதைக் கடந்த தந்தை, 75 வயதைக் கடந்த மகன். வரும் தலைமுறையினர்  இதுபோன்ற ஒரு உறவை தக்கவைத்துக் கொள்ள முடியுமா என பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் படுக்கையில் படுத்திருக்கிறார் தந்தை. அவரது பக்கத்தில் மகன் அமர்ந்திருக்கிறார். சிறிது நேரம் தந்தையும் மகனும்  பேசிக் கொள்கின்றனர். பின்னர், பாட்டு பாடவா…. பார்த்து பேசவா… என்ற பாடலை மகன் விசிலடித்துக் காட்ட அதை அவரது அப்பா விரல்களை அசைத்துக் கொண்டே ரசிக்கிறார். இது என்ன பாட்டு என்று கண்டுபிடி என மகன் கேட்க மெல்லிய குரலில் பாட்டு பாடவா என்று அவரது தந்தை சொல்லும் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பகிரப்பட்ட இந்த வீடியோ 2.7 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. 16,000-க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.