இணையத்தில் வைரலாகும் முட்டை அல்வா!

முட்டையை வைத்து அல்வா செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  இனிப்பு வகைகள் பலரும் விரும்பி சாப்பிட கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.    திருமணங்கள்,  விழாக்கள்,  விருந்து, திருவிழா என்று எது வந்தாலும் முதலில்…

முட்டையை வைத்து அல்வா செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இனிப்பு வகைகள் பலரும் விரும்பி சாப்பிட கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.    திருமணங்கள்,  விழாக்கள்,  விருந்து, திருவிழா என்று எது வந்தாலும் முதலில் இனிப்பு தான் வழங்கப்படும்.  சில விழாக்களில் அதிகமாக அல்வா வழங்கப்படுகிறது.  பொதுவாக கோதுமை,  கேரட்,  பிரட் உள்ளிட்டவற்றார் அல்வா செய்யப்படுகிறது.

இந்த நிலையில்,  முட்டையை வைத்து அல்வா செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  முட்டையை வைத்து ஆம்லெட்,  ஆம்லெட்,  கலக்கி உள்ளிட்ட பல உணவுப் பொருட்களை செய்யப்படுகின்றன.  இந்த நிலையில் தற்போது முட்டை அல்வா வீடியோ பகிரப்பட்டுள்ளது.  இந்த வீடியோ அஸ்மா கிரே என்ற இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

இந்த வீடியோ ஒரு பெண் முட்டையை உடைப்பதில் இருந்து தொடங்குகிறது.  பின்னர் அவர் அதில் மாவு,  சர்க்கரை போன்றவற்றை சேர்க்கிறார்.  அதன்பின் கிரீம், உலர் பலங்களை சேர்த்து அல்வா செய்கிறார்.  இந்த வீடியோ 21 ஆயிரம் விருப்பங்களையும், பல கருத்துக்களையும் பெற்றது.

https://www.instagram.com/p/C3cSlIPSW1n/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.