லியோ திரைப்படத்தின் அதிகாலை 4 மணி காட்சிக்கு தமிழ்நாட்டில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கர்நாடகா, கேரள மாநிலங்களில் அதிகாலை காட்சி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்-ன் லியோ திரைப்படம் திரையரங்குகளில் திரையிடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு சில கட்டுப்பாடுகளுடன் அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, வரும் 19 முதல் 24-ம் தேதி வரை திரையரங்குகளில் சிறப்பு காட்சி உட்பட தினசரி 5 காட்சிகள் திரையிடவும், காலை 09.00 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் அதிகாலை 01.30 மணிக்குள் 5 காட்சிகளை முடிக்க வேண்டும் எனவும் ஆணைகள் வெளியிட்டுள்ளது.
LEO படத்தின் முதல் 10 நிமிடங்களை தவற விட்டுவிடாதீர்கள் எனவும், பார்வையாளர்களுக்கு விசுவல் ட்ரீட்டாக அமையும் எனவும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். படத்தின் முதல் 10 நிமிடத்திற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓராண்டாக உழைத்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.







