இறைச்சிக்காக வேட்டையாடப்படும் கழுகுகள்? – நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட செய்தி எதிரொலியாக வனத்துறை விசாரணை!

நெல்லையில் இறைச்சிக்காகக் கழுகுகள் வேட்டையாடப்படுவதாக நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக வனத்துறை விசாரணை நடத்தினர். திருநெல்வேலி டவுன் மற்றும் பேட்டை பகுதிகளில் குறி வைத்து கழுகுகள் வேட்டையாடப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மேலும் உணவு கடைகளுக்கு இறைச்சியாகக் கழுகுகள் விற்பனை…

நெல்லையில் இறைச்சிக்காகக் கழுகுகள் வேட்டையாடப்படுவதாக நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக வனத்துறை விசாரணை நடத்தினர்.

திருநெல்வேலி டவுன் மற்றும் பேட்டை பகுதிகளில் குறி வைத்து கழுகுகள் வேட்டையாடப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மேலும் உணவு கடைகளுக்கு
இறைச்சியாகக் கழுகுகள் விற்பனை செய்யப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

கழுகு இறைச்சிகள் சமைத்து உண்ணப்படுவது மட்டுமல்லாமல் அவை முழுமையாகச் சுத்தம் செய்யப்பட்டு உணவு விடுதிகளுக்கு இறைச்சியாக விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இந்நிலையில், சிலர் குழுவாக இணைந்து வலை விரித்து கழுகுகள் உள்ளிட பறவைகளை பிடிக்கும் காட்சியை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது. இதன் எதிரொலியாக, வனத்துறையினர் அப்பகுதிகளில் நேரில் விசாரணை செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.