நடிகர் கமல்ஹாசனுக்கு கோல்டன் விசா வழங்கி துபாய் அரசு கௌரவித்ததுள்ளது.
10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் கோல்டன் விசா நடிகர் கமல்ஹாசனுக்கு
வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தைப் பொறுத்தவரை அங்குள்ள அரசாங்கம், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், அறிவியலில் அதிக ஆர்வம் மற்றும் திறன் கொண்ட மாணவர்கள், அறிவியல் மற்றும் அறிவியலின் பல்வேறு துறைகளில் தனிப்பட்ட மற்றும் சிறப்பான திறன் கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகக்கூடிய வகையில் இத்தகைய கௌரவ கோல்டன் விசாக்கள் வழங்கப்படுகிறது.

துபாய் சென்றுள்ள கமல்ஹாசன் அங்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில், ஐக்கிய அரசு அமீரகத்தால் வழங்கப்படும் கோல்டன் விசா துபாயில் கமலுக்கு வழங்கி சிறப்பித்துள்ளது. இதற்கு முன்பாக நடிகை திரிஷா, பார்த்திபன், மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட பலர் கோல்டன் விசா பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-ம.பவித்ரா







