தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் ப்ரீத்தி மெஹர் சூரிய மின்கலங்களை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்ததன் வாயிலாக, ஃபுல்பிரைட்-கலாம் காலநிலை ஸ்காலர்ஷிப் மூலம் அமெரிக்காவில் ஆய்வு மேற்கொள்ளும் வாய்ப்பை பெற்று சாதனை படைத்துள்ளார்.
முனைவர் ப்ரீத்தி மெஹர் சூரிய மின்கலங்களில் பெரோவ்ஸ்கைட்டைப் பயன்படுத்த முன்மொழிந்துள்ளார். இது அவற்றை மிகவும் நிலையானதாகவும், எளிதாகவும் பயன்படுத்த பல்வேறு வழிகளை திறந்துவிட்டுள்ளது. தற்போது, வணிகப் பயன்பாட்டில் உள்ள PV செல்கள் அல்லது சோலார் ஆலைகளுக்கு இடவசதி தேவைப்படுகின்றன, ஆனால் மெஹரின் ‘ஹைப்ரிட் பெரோவ்ஸ்கைட்’ மூலம் அவை எளிதாக பயன்படுத்தக்கூடியதாக அமையும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இத்தகைய ஆய்வின் மூலம் கிடைத்துள்ள உதவித்தொகையின் ஒரு பகுதியாக, மெஹர் ஆராய்ச்சி செய்யவும் மற்றும் அமெரிக்காவில் இந்த துறை சார்ந்த பணி அனுபவத்தைப் பெறவும் வாய்ப்புகளை பெறுவார். அதோடு மெஹருக்கு J-1 விசா மற்றும் உதவித்தொகை மற்றும் பிற சலுகைகளும் கிடைக்கும்.
ப்ரீத்தி மெஹர் பெறும் முதல் வெளிநாட்டு உதவித்தொகை அல்ல ஃபுல்பிரைட். பெங்களூர் ஐஐஎஸ்சியில் பிஎச்டி படித்த போது, ஈராஸ்மஸ் முண்டஸ் வில்பவர் பெல்லோஷிப்பைப் பெற்றார். இதன் மூலம் அவர் எகோல் சென்ட்ரல் பாரிஸில் உள்ள CNRS SPMS ஆய்வகத்தில் சுமார் 9 மாதங்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டார்.
42 வயதான ப்ரீத்தி மெஹர் இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆவார். இந்நிலையில் ஃபுல்பிரைட்-கலாம் காலநிலை ஸ்காலர்ஷிப் பெற தகுதி பெற்று சாதனை படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.