2022 ஆம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்காக தொண்டாற்றிய 2022 ஆம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்காக தொண்டாற்றிய
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்காக தொண்டாற்றி வரும் நபருக்கு தமிழ்நாடு அரசால் 1998 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை 24 நபர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்காக தொண்டாற்றிய நபருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023 ஆண்டு திருவள்ளுவர் தினத்தன்று திரு. எஸ்.வி.ராஜதுரை அவர்களுக்கு வழங்கிடவும் மற்றும் விருதாளர்களுக்கான பரிசுத் தொகையாக ரூபாய் ஐந்து இலட்சம் வழங்கியும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்.
இவரின் இயற்பெயர் மனோகரன். இவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவர். 2022 ஆம் ஆண்டிற்கான “டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது “திரு. எஸ்.வி.ராஜதுரை அவர்களுக்கு வழங்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், இவ்விருதாளருக்கு விருதுத் தொகையாக ரூபாய் ஐந்து இலட்சமும், 8 கிராம் தங்கப் பதக்கமும், தகுதியுரையுடன் வழங்கப்படும்.
“டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது “ பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ள எஸ்.வி.ராஜதுரை அவர்கள் கீழ்கண்ட நூல்களை எழுதியுள்ளார்.
• மார்க்சியம்
• அந்நியமாதல்
• இலங்கைத் தமிழர் சிக்கல்
• ரஷ்யப்புரட்சி
• இந்து இந்தி இந்தியா
• பெரியார் : மரபும் திரிபும்
• ஆகஸ்ட் 15 துக்க நாள் இன்ப நாள்
• அயர்லாந்தின் போராட்டம் : தேசியமும் சோசலிசமும்
• தலித்தியமும் உலக முதலாளியமும்.
• பதி பசு பாகிஸ்தான்
• ஓர் அணுகுண்டு இரு கவிஞர்கள்
• இந்து இந்தியா
• சொல்லில் நனையும் காலம்
• மார்க்சியம், பெரியாரியம், தேசியம்
எஸ்.வி.ராஜதுரை அவர்கள் புரட்சிகரமான கருத்துக்களை தனது நூல்களில் வெளிகொணர்ந்துள்ளார். மேலும், தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.
இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.







