29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் சினிமா

“லியோ” படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கு தெரியுமா?

லியோ படம் அடுத்த மாதம் அக்டோபர் 19ம் தேதி இந்தப் படம் ரிலீசாகவுள்ள நிலையில், படத்திற்கான பிரமோஷன்கள் தற்போது துவங்கியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு சிறப்பு கிளிம்ப்ஸ் விடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இப்படத்தின் எடிட்டிங் பணிகளைத் தொடர்ந்து அடுத்ததாக விஎஃப்எக்ஸ் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இதன்பின், டப்பிங் மேற்கொள்ளபட உள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தின் தரத்தை தீவிரமாக மெறுகேற்றி வருகிறார். இப்படத்தின் இரண்டாவது பாடலும் விரைவில் வெளியாக உள்ளது.நேற்று லியோ படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ”Keep calm and avoid the battle” என்ற வாசகங்களுடன் வெளியான போஸ்டர்கள் இணையத்தில் வைரலானது. இந்த போஸ்டரை படக்குழுவும், இயக்குநர் லோகேஷும் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டர். அதன் தொடர்ச்சியாக இன்று மாலை 6 மணிக்கு படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிடப்போவதாக தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டது.

அதன்படி, நேற்று ஒரு போஸ்டரை படக்குழு தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் கன்னடம் மொழியின் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவ்வப்போது வெளிவரும் இதுபோன்ற அப்டேட்டுகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில், படத்தின் இசை வெளியீடு இந்த மாதம் 30ம் தேதி திட்டமிடப்பட்டுள்ளதாக படக்குழு முன்னதாகவே அறிவித்தது. ஆனால் படத்தின் இசை வெளியீடு எங்கு நடக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் காணப்பட்டது. இந்நிலையில் தற்போது சென்னை நேரு ஸ்டேடியத்தில் லியோ படத்தின் இசை வெளியீடு வரும் 30ம் தேதி நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading