லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய திரைப்படம் சிறப்பான முறையில் உருவாகும் என்று நடிகர் ரஜினிகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெறும் தனது குடும்ப விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார். இதற்காக விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவைக்கு அவர் பயணம் மேற்கொண்டார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடும்ப விழாவில் பங்கேற்பதால் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க செல்லவில்லை என்றார். தனது அடுத்த திரைப்படம் லைகா நிறுவன தயாரிப்பில் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் உருவாக உள்ளதாக குறிப்பிட்டார்.







