‘கல்கி 2898 ஏடி’ படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் ‘தி ராஜாசாப்’. த்ரில்லர் ஜானரில் உருவாகி வரும் இப்படத்தை பிப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. மாருதி இயக்கும் இப்படத்தில் பிரபாஸுடன் இணைந்து சஞ்சய் தத், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படம் வருகிற டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்திற்கு காக்ககாக்க, சிறுத்தை, பையா உள்ளிட்ட பல தமிழ் படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றிய ராஜீவன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். இவர் இப்பத்திற்காக ஹைதராபாத்தில் மிகப்பெரிய பங்களா செட்-ஐ உருவாக்கியுள்ளார். 42 ஆயிரம் சதுர அடியில் அரண்மனைபோல் உருவாக்கப்பட்ட இந்த சினிமா செட் ஆசியாவிலேயே மிகப்பெரியது. இதனை ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் இணைந்து 4 மாதங்களில் கட்டி முடித்துள்ளனர்.
இப்படம் குறித்து இயக்குநர் மாருதி, “பிரபாஸ் நடித்த பாகுபலி, கல்கி படங்கள் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த படமும் ஆயிரம் கோடியை தாண்டும். குறும்புகள் செய்யும், துறுதுறு பிரபாசை படத்தில் பார்க்கலாம். அந்த பேய் பங்களாவுக்கு அவர் ஏன் வருகிறார். அவர் நோக்கம் என்ன,.பேய் என்ன செய்கிறது என்ற கான் செப்ட் ரசிக்கும்படி இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.









