முக்கியச் செய்திகள் சினிமா

இயக்குனர் வசந்தபாலனின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?

இயக்குனர் வசந்தபாலன் தனது பள்ளிப்பருவ நினைவலைகளையும், தனது உண்மையான பெயரையும்  பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனார்.

இயக்குனர் வசந்தபாலன் தனது நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை துவங்கி இத்திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறியுள்ளார். மேலும் இப்படத்தை அவரே இயக்கி, கதை, திரைக்கதையையும் எழுதியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த திரைப்படத்தில் கைதி, மாஸ்டர் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் அர்ஜூன்தாஸ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் மாரியம்மாவாக நடித்து பெரும் கவனம் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் நடிகை துஷாரா விஜயன் நாயகியாக நடித்திருக்கிறார். இயக்குநர் வசந்தபாலனால் ’வெயில்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட ‘இசை அசுரன்’ G.V.பிரகாஷ்குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தற்போது இந்த திரைப்படத்தின் விளம்பர படப்பிடிப்பிற்காக இயக்குனர் வசந்தபாலன் விருதுநகர் சென்றுள்ளார். அங்கு தான் படித்த பள்ளிக்கு சென்ற அவர், தனது பள்ளிப்பருவ நினைவலைகளை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அதில், “அநீதி திரைப்படத்தின் விளம்பர படப்பிடிப்பிற்காக விருதுநகர் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 34 வருடங்களுக்கு பிறகு நுழைந்தேன். பள்ளி மாணவனாக மனம் மெல்ல மாற துவங்கியது. நான் அமர்ந்த வகுப்பு மேஜையில் அமர்ந்திருந்தேன்.

பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கிறுக்கல்களோடு என் கிறுக்கலும் மேஜையை அலங்கரித்தது. காலை பிரார்த்தனை கூடம், நூலகம், விளையாட்டு மைதானம், சைக்கிள் ஸ்டாண்டு என பல்வேறு இடங்களில் என்னை தேடியலைந்தேன். என் காலடி தடங்களை, என் வாசத்தைத் தேடி தேடி காணக் கிடைக்காமல் பள்ளிப்படிக்கட்டுகளில் சோர்வாய் அமர்ந்தேன். 12ம் வகுப்பு வரை படித்த பாலமுருகனைக் காணவில்லை. வசந்தபாலன் சார் ஒரு தன் படன் (செல்ஃபி) என்று ஒரு மாணவன் என்னிடம் கேட்டப்போது, “நான் வசந்த பாலன் இல்ல G.பாலமுருகன் பிளஸ் டூ கணக்கு தமிழ்ப்பிரிவு” என்றேன், என பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் புதிதாக 1,612 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

G SaravanaKumar

காரை நடமாடும் க்ளினிக் ஆக மாற்றி சேவையாற்றும் மருத்துவர்!

Vandhana

கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Gayathri Venkatesan