எலான் மஸ்க்கிற்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்களின் பெயர்- X Æ A-Xii, Exa Dark Sideræl Musk, மற்றும் Tau Techno Mechanicus ஆகும். இதனை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
பிரபல சமூக வலைதளமாக திகழும் ட்விட்டர் (எக்ஸ்), டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் உரிமையாளர் எலன் மஸ்க் உலகெங்கும் புகழ்பெற்ற பணக்காரர்களில் ஒருவர் மட்டும் இல்லாமல், அவருடைய சொந்த சமூக வலைத்தளத்தில் அவர் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அவரை அவரே காலாய்த்துக்கொள்ளும் மீம்களை வெளியிடுவதை கூட பல சமயங்களில் பார்க்க முடியும். வேறு யாராவது ட்ரோல் செய்தாலும் அதையும் ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொள்ளும் மனநிலை அவருக்கு பல ரசிகர்களையும் கொண்டு வந்தது.
இதயனிடையே எலான் மஸ்க் வாழ்க்கை வரலாற்றை எழுதும் ஆசிரியர் வால்டர் ஐசக்சன் சமீபத்தில் வெளியிட்டுள்ள படம் ஒன்று அப்போது இணையத்தில் வைரலானது. ஷிவோனுக்கும் எலான் மஸ்க்கிற்கும் 2021 நவம்பர் மாதம் இரட்டைக் குழந்தை பிறந்தது. அந்த புகைப்படத்தில், எலான் மஸ்க், இரட்டைக் குழந்தைகள் மற்றும் அவரின் தாயார் ஆகியோர் இருந்தனர். எலான் மஸ்க் தனது இரட்டைக் குழந்தைகளுடன் இருப்பதைப்போன்று வெளியான முதல்படம் இதுவே ஆகும்.
இந்நிலையில் இவ்வளவு நாட்கள் எலோன் மஸ்க் மற்றும் க்ரிம்ஸ் தம்பதியினருக்கு மூன்றாவதாக ஒரு குழந்தை இருப்பது வெளிவராத நிலையில், தற்போது எலோன் மஸ்க்கின் சுயசரிதை நூல் வெளிவர இருக்கும் இந்த சூழலில் அந்த குழந்தை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. எலோன் மஸ்க் மற்றும் க்ரிம்ஸ் மூன்றாவது குழந்தையை ரகசியமாக வளர்ப்பதாக கூறப்படுகிறது. மஸ்க்கிடம் நடத்தப்பட்ட இரண்டு ஆண்டுகள் தீவிர உரையாடலின் அடிப்படையில் இந்த புத்தகம் எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதில் இவரது மூன்றாவது குழந்தையின் பெயர் டெக்னோ மெக்கானிக்கஸ் என்று தெரிகிறது. இதனை எலான் மஸ்கின் சுயசரிதை நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. குழந்தைக்கு “டாவ்” என்ற புனைப்பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மஸ்க் மற்றும் க்ரிம்ஸ் தம்பதியினருக்கு பிறந்த குழந்தையை சேர்த்து அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்களின் பெயர்கள் X Æ A-Xii, Exa Dark Sideræl Musk மற்றும் Tau Techno Mechanicus. இருப்பினும் மஸ்க்குக்கு மொத்தம் 11 உயிரியல் குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மஸ்க்கின் மூன்றாம் குழந்தையின் பெயரை ரசிகர்கள் பெரிதும் பேசுபொருளாக்கியுள்ளனர். அந்த பெயரையும், அவரையும் ட்ரால் செய்துவருகின்றனர். அவற்றுள் சிலவற்றை இங்கே காணலாம்..







