2000 வருடத்திற்கு முன்பே மேக்-அப் பொருட்களை பயன்படுத்திய நகரம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

2000 வருடத்திற்கு முன்பே மேக்-அப் பொருட்களை பயன்படுத்திய நகரம் பற்றி ஆச்சர்ய்தக்க ஆராய்ச்சி முடிவுகள் தொல்லியல் ஆய்வில் வெளியாகியுள்ளன. மேற்கு துருக்கியில் உள்ள பழமையான நகரமான அஜினோயில் 2000 வருடங்களுக்கு முன்பே மேக்-அப் உள்ளிட்ட…

2000 வருடத்திற்கு முன்பே மேக்-அப் பொருட்களை பயன்படுத்திய நகரம் பற்றி ஆச்சர்ய்தக்க ஆராய்ச்சி முடிவுகள் தொல்லியல் ஆய்வில் வெளியாகியுள்ளன.

மேற்கு துருக்கியில் உள்ள பழமையான நகரமான அஜினோயில் 2000 வருடங்களுக்கு முன்பே மேக்-அப் உள்ளிட்ட ஒப்பனை மற்றும் அழகு சாதன பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா..?

2000 வருடங்களுக்கு முன்பு அழகு சாதனைப் பொருட்களை ரோம பேரரசின் பழமையான நகரமான அஜினோயில் பயன்படுத்தியுள்ளதாக சமீபத்தில் வெளியான தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.  இவற்றை ரோம காலத்தில் உள்ள பெண்கள் பயன்படுத்தியுள்ளதாகவும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்ததில், நகைகள் மற்றும் வாசனை திரவியங்கள் மற்றும் ஒப்பனை போன்ற அழகுசாதனப் பொருட்களை விற்கும் ஒரு கடையை இருந்ததாகவும் அந்த ஆய்வுகள் முடிவுகள் தெரிவிக்கின்றன.  மேலும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த நெக்லஸ்கள் மற்றும் ஹேர்பின்களில் இருந்து பல்வேறு மணிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

தொல்லியல் ஆராய்ச்சியில் கண்டுபிடித்த பழங்கால கடைகளில் சிப்பி ஓடுகள் மற்றும் வாசனை திரவிய பாட்டில்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை ஒப்பனைகளை மற்றும் அழகு சாதனை பொருட்களை சேமிக்க  பயன்படுத்தப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு முடிவுகளில் ஆச்சர்யதக்க கண்டுபிடிப்புகள் என்னவெனில் “ மேக்-அப் எனப்படும் ஒப்பனைகளில் சிவப்பு மற்றும் ரோஸ் நிறங்களில் பிக்மெண்ட் எனப்படும் முகப்பூச்சுகள் பயன்படுத்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.