ஒரே நாளில் வெளியான வாழை, கொட்டுக்காளி – #FirstDayCollection எவ்வளவு தெரியுமா?

ஒரே நாளில் வெளியான வாழை மற்றும் கொட்டுக்காளி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்ததாக வாழை என்கிற படத்தைத்…

Do you know how much Vaazhai, Kotukkali - #FirstDayCollection released on the same day?

ஒரே நாளில் வெளியான வாழை மற்றும் கொட்டுக்காளி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்ததாக வாழை என்கிற படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார். இந்தப் படம் நேற்று (ஆக.23) திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தில் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தைப் பார்த்த இயக்குநர்கள் மற்றும் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

கூழாங்கல் திரைப்பட இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது கொட்டுக்காளி திரைப்படம். இப்படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மலையாள நடிகை அன்னா பென் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

பெர்லின் சர்வதேச திரைப்பட விழா என பல சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. மூட நம்பிக்கை, ஆணாதிக்கம் மற்றும் சிக்கலான மனித உணர்வுகள் குறித்து இப்படம் பேசும் என இயக்குநர் தெரிவித்திருந்தார்.

Kotukkali Film Crew My Another Family - #AnnaBen Post on Instagram!கொட்டுக்காளி மற்றும்  வாழை  திரைப்படம் நேற்று ஒரேநாளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இதில், இந்திய அளவில்  வாழை திரைப்படம் ரூ. 1.15 கோடியையும் கொட்டுக்காளி ரூ. 50 லட்சத்தையும் முதல் நாளில் வசூல் செய்துள்ளதாக வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.