மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் துல்கர் சல்மான். மலையாளம் மட்டுமின்றி தமிழ்,தெலுங்கு, இந்தி ஆகிய மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான லக்கி பாஸ்கர் படம் ரூ 100 கோடி வசூலித்து மிரட்டியது. இதனை தொடர்ந்து கடந்த நவம்பர் 14ல் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான காந்தா திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
இப்படம் மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்வை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ளார். மேலும் இப்படம் மூலம் நடிகை பாக்யஸ்ரீ போஸ் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.
இந்த நிலையில் காந்தா திரைப்படம் மூன்று நாளில் ரூ 24.50 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.








