எது சமூக நீதி ? நடிகை விந்தியா கேள்வி

  நெல்லை மாவட்டம் திசையன் விளையில் நடந்த அதிமுக பொன் விழா பொதுக்கூட்டத்தில் திமுகவின் திராவிட மாடல் திருட்டு திராவிட மாடல் என நடிகை விந்தியா பேச்சு. நெல்லை மாவட்டம் திசையன் விளை நேருஜி…

 

நெல்லை மாவட்டம் திசையன் விளையில் நடந்த அதிமுக பொன் விழா பொதுக்கூட்டத்தில் திமுகவின் திராவிட மாடல் திருட்டு திராவிட மாடல் என நடிகை விந்தியா பேச்சு.

நெல்லை மாவட்டம் திசையன் விளை நேருஜி திடலில் அதிமுக 51 வது ஆண்டு தொடக்க விழா மற்றும் பொன்விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொன்விழா பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பொன்விழா பொதுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நடிகை விந்தியா பேசியபோது, ‘திமுகவின் திராவிட மாடல் திருட்டு திராவிட மாடல் என கடும் விமர்சனம் செய்தார்.

பத்து ரூபாய்க்கு நாம் பேனா வாங்கி ஆயுத பூஜையில் வைத்து பூஜை கும்பிட்டால் முட்டாள்தனம் என்பது கோடியில் பேனா செய்து செத்தவருக்கு சிலை வைத்தால் அது திராவிட மாடல். மக்களை ஏமாற்ற அவர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதமே திராவிட மாடல் பகுத்தறிவு சமூக நீதி.

திராவிட மாடல் என்பது என்ன குடும்பத்தில் ஒருவர் நாட்டுக்காக உழைத்தால் அது திராவிட மாடல். நாடே சேர்ந்து ஒரு குடும்பத்திற்காக உழைத்தால் அது ‘திருட்டு திமுகவோட திராவிட மாடல்”. எனக்குத் தெரிந்து ஸ்டாலின் உருவாக்கிய இரண்டு வேஸ்ட் பீஸ். ஒன்று உதயநிதி. இன்னொன்று திராவிட மாடல் சமூக நீதியும் பொருளாதார வளர்ச்சியும் சேர்ந்தே வளரனும். உண்மையில் திராவிட மாடலை கொண்டு வர வேண்டும் என்று நினைத்தது அண்ணாவும், பெரியாரும்.

பெரியார் ஒழிக்க நினைத்த ஜாதியை பயன்படுத்தி இன்று முதல்வர் ஸ்டாலின் விளம்பரம் தேடுகிறார். நீங்களே யோசிச்சு பாருங்க அருந்ததியர் வீட்டில் போய் டீ குடிச்சாரு ஸ்டாலின்னு விளம்பரம் வருது. டீ கொடுத்தவர்கள் ளோட ஜாதி பேர போடுறீங்கல்ல. ஆப்போ டீ குடிச்ச உங்களோட ஜாதியை போடுங்க.

அதுதானே சமூக நீதி. ஒன்னு ஜாதியை ஒழி இல்ல சமமாக்கு. பிள்ளையார் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல மாட்டார் ஸ்டாலின். ஆனால் பக்ரீத்துக்கு வாழ்த்து சொல்லுவார். இது என்ன பகுத்தறிவு. இது என்ன சமூக நீதி. மறுத்தா ரெண்டையும் மறு. ஏத்துக்கிட்டா இரண்டையும் ஏத்துக்கோ. அதுதான் சமூக நீதி.

எங்க புரட்சித்தலைவி அம்மா நாகூர் சந்தன கூட்டுக்கு சந்தனம் கொடுத்தாங்க. வேளாங்கண்ணி சர்ச்சுக்கு நிதி உதவி கொடுத்தாங்க.‌ கோவில்ல அன்னதானத் திட்டம் கொண்டு வந்தாங்க. அது சமூக நீதி. ஒடுக்கப்பட்ட வங்களுக்கு உணவு இலாகா கொடுத்து ஊருக்கே சோறு போட சொன்னாங்க .அது சமூக நீதி. பெண்களுக்கு எதிரா தப்பு செஞ்சவங்க சொந்த கட்சிக்காரர்களா இருந்தாலும் தூக்கி வீசுனாங்க.அது சமூக நீதி. அரசு பள்ளி மாணவர்களின் கனவை நினைவாக்க 7.5 சதவீத இட ஒதுக்கீடு தந்தார் அண்ணன் எடப்பாடி.அது சமூக நீதி என பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.