நாடு முழுவதிலும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் கடந்த 2020-21 நிதி ஆண்டில் பெற்ற மற்றும் செலவழித்த நிதியில் திமுக முதலிடத்தில் உள்ளது.
மாநில கட்சிகள் தாங்கள் பெறும் நிதி மற்றும் செலவழிக்கும் நிதி குறித்த கணக்குகளை இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிப்பது வழக்கம். அந்த வகையில், கடந்த 2020-21 நிதி ஆண்டில் கட்சிகள் சமர்ப்பித்துள்ள கணக்குகள் குறித்த தகவல்களை திரட்டி ஜனநாயக சீர்திருத்தத்திற்கான கூட்டமைப்பு அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 2020-21 நிதி ஆண்டில் நாடு முழுவதுமுள்ள மாநில கட்சிகள் திரட்டிய நிதி ரூ.529.41 கோடி. இதில், திமுக ரூ.149.95 கோடியை திரட்டியுள்ளது. இதற்கு அடுத்ததாக YSR காங்கிரஸ் ரூ.107.99 கோடியும், பிஜூஜனதா தளம் ரூ.73.34 கோடியும், ஐக்கிய ஜனதா தளம் ரூ.65.31 கோடியும், தெலங்கானா ராஷ்ட்ர சமிதி ரூ.37.65 கோடியும் திரட்டியுள்ளன.
இதேபோல், இந்த நிதி ஆண்டில் 31 கட்சிகளும் ரூ.414.02 கோடியை செலவழித்துள்ளன. இதில், திமுக ரூ.218.49 கோடியை செலவழித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக தெலுகு தேசம் கட்சி ரூ.54.76 கோடியும், அதிமுக ரூ.42.36 கோடியும் செலவழித்துள்ளன.









