ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அண்ணாமலை சந்திப்பு – அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்த பட்டியலை வழங்கினார்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்தார்.  தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை தொடர்ந்து திமுக குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். ராமேஸ்வரத்தில் இருந்து வரும் 28-ம்…

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்தார். 

தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை தொடர்ந்து திமுக குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.

ராமேஸ்வரத்தில் இருந்து வரும் 28-ம் தேதி அண்ணாமலை பாதயாத்திரை தொடங்க உள்ளார். இந்த பாதயாத்திரைக்கு முன்பாக திமுகவினரின் ஊழல் புகார்கள் தொடர்பான  இரண்டாவது பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுகவில் உள்ள முக்கிய பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை ‘திமுக பைல்ஸ் 1’ என்ற தலைப்பில் அண்ணாமலை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் இன்று ஆளுநரை சந்தித்த அண்ணாமலை, திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோர் மீதான ஊழல் புகார்கள் குறித்த பட்டியலை வழங்கினார். இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் அண்ணாமலை பகிர்ந்துள்ளார்.

அப்பதிவில்,  திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், மேலும், ₹5600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கி, இது தொடர்பாக ஆளுநர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளோம்”  என குறிப்பிட்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.