முக்கியச் செய்திகள் தமிழகம்

கட்சிப் பணிகளுக்காக திமுக மாவட்டங்கள் மாற்றியமைப்பு

நிர்வாக வசதிக்காகவும் கட்சிப் பணிகள் செம்மையுற நடைபெற்றிடவும் கோவை, திருப்பூர், தருமபுரி, மதுரை மாநகர் ஆகிய மாவட்டங்களின் சட்டமன்றத் தொகுதிகளை  மாற்றியமைத்து திமுக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திமுகவில் கிளை, பேரூர்க்கழகம், மாநகர வட்டக்கழகம், ஒன்றிய – நகர – மாநகர பகுதிக்கழகம், மாநகரக் கழகம், மாவட்டம் என பல்வேறு கட்டங்களாக 15 ஆவது உட்கட்சித் தேர்தல் தேர்தல் நடைபெறவுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மாவட்டச்செயலாளர் பொறுப்பிற்கான தேர்தல் செப்டம்பர் 22இல் வேட்பு மனு தாக்கல் என திமுக பொதுச்செயலார் துரைமுருகன் அறிவிப்பு

மாவட்டச்செயலாளர் தேர்தல் முடிந்தவுடன் கூடவுள்ளது திமுக பொதுக்குழு

பொதுக்குழுவில் துணைப்பொதுச்செயலாளர்கள் எண்ணிக்கையை உயர்த்தி அறிவிக்கவும் திமுக திட்டம்திமுக மாவட்டங்கள் – மாற்றியமைப்பு

நிர்வாக வசதிக்காகவும் கட்சிப் பணிகள் செம்மையுற நடைபெற்றிடவும் கோவை, திருப்பூர், தருமபுரி, மதுரை மாநகர் ஆகிய மாவட்டங்களின் சட்டமன்றத் தொகுதிகள் மாற்றியமைத்து அறிவிப்பு

திமுக மாவட்டக் கழகத் தேர்தல்

திமுக 15வது பொதுத் தேர்தல் நடைபெற இருக்கின்ற பின்வரும் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் அவைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர்கள் மூவர் (கட்டாயமாக ஒருவர் பொதுத் தொகுதியினராகவும், ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது மலைவாழ் வகுப்பினராகவும், ஒருவர் மகளிராகவும் இருத்தல் வேண்டும்), பொருளாளர் மற்றும் தலைமைக் கழகத்தால் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் (மகளிர் ஒருவர் கட்டாயமாக இருத்தல் வேண்டும்) ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர் அதற்கென உள்ள படிவத்தில் முறைப்படி பூர்த்தி செய்து கீழே குறிப்பிட்டுள்ள நாட்களில் பொறுப்பு ஒன்றுக்கு ரூ.25,000 கட்டணமாக தலைமைக் கழகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேட்புமனுக்களை முன்மொழிபவரும், வழிமொழிபவரும் அந்தந்த மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூர்/ஒன்றிய/நகர/நகரிய/பகுதி/ மாநகர செயலாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட பிரதிநிதிகளாகத்தான் இருக்க வேண்டும்.

வேட்புமனு விண்ணப்பப் படிவம் ஒன்றுக்கு ரூ.1000 கட்டணம் செலுத்தி தலைமைக் கழகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுகவில் 50 எம்.எல்.ஏ.க்கள் திமுகவுடன் தொடர்பில் உள்ளனர் : ஆர்.எஸ்.பாரதி பதில்

Dinesh A

அதிதி சங்கருக்கு ஆதரவு தெரிவிக்கும் பாடகி ராஜலட்சுமி

Web Editor

தமிழக விஞ்ஞானிக்கு சர்வதேச விருது!