தெலுங்கு திரைப்பட உலகின் பிரபல இயக்குநர் கே.விஸ்வநாத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
92 வயதான கே.விஸ்வநாத் வயது மூப்பு காரணமாக கடந்த சில வருடங்களாக சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்தார்.
இந்த நிலையில் ஐதராபாத் இல்லத்தில் உடல்நலக் குறைவு காரணமாக கே.விஸ்வநாத் நேற்று நள்ளிரவு காலமானார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
Saddened by the passing away of Shri K. Viswanath Garu. He was a stalwart of the cinema world, distinguishing himself as a creative and multifaceted director. His films covered various genres and enthralled audiences for decades. Condolences to his family and admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) February 3, 2023
அவரது மறைவுக்கு கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட திரையுலகினர், பிரபலங்கள் அஞ்சலி மற்றும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குநர் கே.விஸ்வநாத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கே.விஸ்வநாத் அவர்களின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் சினிமா உலகில் பன்முக படைப்பாற்றலைக் கொண்ட தலைசிறந்த இயக்குநர். அவரது படங்கள் பல தசாப்தங்களாக பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி என்று பதிவிட்டுள்ளார்.
-ம.பவித்ரா