நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை கரம் பிடித்தார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்!

சென்னையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும்  திருமணம் நடைபெற்றது. ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். அதன் பின், சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன்…

சென்னையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும்  திருமணம் நடைபெற்றது.

‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். அதன் பின், சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கினார். அப்படம் தோல்விப்படமாக அமைந்தது. சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இதையும் படியுங்கள் : நாமக்கல் : அயோத்தி ராமர் கோயிலுக்கான மணிகள் தயாரிப்பு – 12 ஆலய மணிகள், 36 பிடி மணிகள் அனுப்பி வைப்பு!

இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் இன்று(டிச.15) சென்னையில் திருமணம் நடைபெற்றது.  ஆதிக் ரவிச்சந்திரனும், ஐஸ்வர்யாவும் சில ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில், சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.