புற்றுநோயிலிருந்து குணமடைந்த நடிகை சோனாலி பிந்த்ரே, தான் அதிலிருந்து மீண்டது பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பம்பாய் படத்தில் ’ஹம்மா ஹம்மா’ என்ற பாடலுக்கு நடனம் ஆடியவர், இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே. குணாலுடன் காதலர் தினம், அர்ஜூனுடன் கண்ணோடு காண்பதெல்லாம் ஆகிய படங்களில் நடித்துள்ள இவர்,
உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புற்று நோயிலிருந்து மீண்ட நினைவுகளைத் தெரிவித்துள்ளார்.
’காலம் எப்படி பறந்து செல்கிறது. இன்று நான் எனது வலிமையை, எனது பலவீனத்தைத் திரும்பிப் பார்க்கிறேன்.இந்த உலகத்தின் கணிப்புகள், உங்களை விழுங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் தேர்வு செய்யும் வாழ்க்கையை நீங்கள்தான் திர்மானிக்க வேண்டும். அதன்படிதான் உங்கள் வாழ்க்கை அமையும். உங்கள் பயணம் போராட்டங்களால் ஆனது. வாழ்க்கையில் மாற்றம் ஒன்றே நிலையானது. இந்த இரண்டு வருடங்கள், வாழ்க்கையில் பல பாடங்களை எனக்குக் கற்றுக்கொடுத்தது. அதுதான் கடினமான சுரங்கப்பாதையை கடக்க, எனக்கான வெளிச்சமாக அமைந்திருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சோனாலி, அமெரிக்காவின் நியூயார்க்கில் சிகிச்சை பெற்று திரும்பினார். புற்றுநோய் பாதித்தபோது அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தற்போதைய புகைப்படத்தையும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.







