“#Vettaiyan-ல் ரஜினிதான் ஹீரோ என தெரியாது!” – நடிகை மஞ்சு வாரியர்!

வேட்டையன் படத்தின் கதை கேட்டபோது அதில் ரஜினிகாந்த் தான் நடிக்க இருக்கிறார் என்பது தனக்கு தெரியாது என நடிகை மஞ்சு வாரியர் பேசியிருக்கிறார். ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்…

"Didn't know Rajini was the hero in #Vettaiyan" - Actress Manju Warrier!

வேட்டையன் படத்தின் கதை கேட்டபோது அதில் ரஜினிகாந்த் தான் நடிக்க இருக்கிறார் என்பது தனக்கு தெரியாது என நடிகை மஞ்சு வாரியர் பேசியிருக்கிறார்.

ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. இதில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இப்படத்தின் தொழில்நுட்ப வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. படம் அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் வேட்டையன் தொடர்பாக மஞ்சு வாரியர் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் பேசியபோது,

“’விடுதலை’, ‘துணிவு’ போன்ற கதைகளை நான் தேர்ந்தெடுக்க முக்கிய காரணம் இயக்குநர்கள் வெற்றிமாறன் மற்றும் ஹெச்.வினோத்தான். இவர்களைப் போன்ற சிறந்த இயக்குநர்களது கதையைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். ’துணிவு’ படத்தில் நான் நடிக்க ஒத்துக் கொண்ட பிறகுதான் அதில் அஜித் நடிக்கிறார் எனத் தெரியும். இதேதான் ‘வேட்டையன்’ படத்திற்கும் நடந்தது. கதை கேட்டு நடிக்க ஒப்புக் கொண்ட பிறகுதான் ரஜினி சார் ஹீரோ எனத் தெரிந்தது. நான் ஆசைப்பட்ட இயக்குநர்கள் மட்டுமல்லாது, நடிகர்களுடனும் சேர்ந்து நடித்தது மகிழ்ச்சி” எனக் கூறியிருக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.