உக்ரைன் அணையை தகர்த்ததா ரஷ்யா? -ஆயிரக்கணக்கான மக்கள் தவிப்பு!…

உக்ரைனின் நோவா ககோவ்காவிலுள்ள டினீப்பர் ஆற்றில் இயங்கும் ககோவ்கா நீர்மின் நிலையத்திலுள்ள அணையை ரஷ்யா தாக்கியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த ஓராண்டிற்கு மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் நடத்தி வருகிறது.…

உக்ரைனின் நோவா ககோவ்காவிலுள்ள டினீப்பர் ஆற்றில் இயங்கும் ககோவ்கா நீர்மின் நிலையத்திலுள்ள அணையை ரஷ்யா தாக்கியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த ஓராண்டிற்கு மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் நடத்தி வருகிறது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா திடீரென போரை ஆரம்பித்தது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

போரை நிறுத்திவிட்டு இருநாடுகளும் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால், இந்த போர் 16 மாதங்களாக நீடித்து வருகிறது.

இந்நிலையில் உக்ரைனின் தெற்கே, ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் இருந்த முக்கிய அணையின் ஒரு பகுதியை, ரஷ்ய படைகள் குண்டு வீசி தகர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், அணையிலிருந்து, 18 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் வெளியேறி கெர்சன், லட்சக்கணக்கான மக்கள் வசிக்கும் 12-க்கும் மேற்பட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு சில மணி நேரத்தில் ஒட்டுமொத்த நகரமே மூழ்கும் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளது.

மேலும் இந்த தாக்குதலில் கக்கோவ்கா நீர்மின் நிலையமும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அத்துடன் கிரிமியன் தீபகற்ப பகுதி, ஐரோப்பிய நாடுகளிலேயே மிகவும் பெரிய ஜபோரிச்ஜியா அணுமின் நிலையம் ஆகியவற்றுக்கு இந்த அணையிலிருந்து தான் தண்ணீர் விநியோகம் நடைபெறுகிறது. அந்த அணையிலிருந்து நீர் வெளியேறினால், அணுமின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ள நிலையில், ரஷ்யா தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு பதிலும் வெளிவரவில்லை. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு, ரஷ்யாவும், உக்ரைனும் அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.