சிவகார்த்திகேயன், யோகி பாபு, சரிதா, அதிதி, மிஷ்கின் நடிப்பில் இன்று வெளியானது மாவீரன் திரைப்படம். இத்திரைப்படத்தின் டிரெய்லரை பார்க்கும் போதே சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து எடுத்துள்ளனர் என்று புரிந்து கொண்டோம், இருந்தாலும் மற்ற சூப்பர் ஹீரோ திரைப்படத்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசங்கள் என்ன அம்சங்கள் என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதை:
பொதுவாக சூப்பர் ஹீரோ படங்களில் ஹீரோவுக்கு ஏதோ ஒரு சக்தி கிடைக்கும். அதுபோலவே தான் இந்த படத்திலும் ஆனா இங்க ஒரு twist சிவாவிற்கு கேட்கும் குரல் தான் அந்த சூப்பர் ஹீரோ. படத்தில் அந்த குரல் எதற்காக ஒலிக்கிறது அந்த குரல் சிவாவை என்ன என்ன செய்ய வெய்கிறது என்பது தான் படத்தின் மீதி கதை.
படத்தில் அதிதி ஒரு பத்திரிகையாளராக நடித்துள்ளார். சிவாவிற்கு உதவி செய்வது போல் உள்ள கதாபாத்திரம். ஆனால் படத்தில் பெரிதாக scope இல்லை. மொத்தமாக சொல்ல போனால் கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் திரையில் தோன்றுகிறார்.
பல ஆண்டுகள் கழித்து சரிதவை இந்த படம் மூலம் திரையில் காண முடிந்தது. இத்தனை ஆண்டுகள் கழித்தும் அற்புதமான நடிப்பு கலை இன்னும் அவரிடமிருந்து மாறவில்லை. இந்த படத்தில் சிவாவிற்கு அம்மாவாக நடித்துள்ளார். Rugged அம்மா என்று சொல்லலாம். பொதுவா அம்மா பையன் காம்போ என்றால் படத்தில் ஒரு touch இருக்கும். ஆனால் இந்த படத்தில் அம்மா பையன் காம்போ பெரிதாக மனதில் நிற்கவில்லை.
நல்ல தொடக்கமாக மோனிஷா பிலஸ்ஸிக்கு அமைந்துள்ளது. சிவாவிற்கு தங்கையாக நடித்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் படத்தின் ஹீரோயினை விட மோனிஷா பிளஸிக்கு அதிக காட்சிகளில் வருகிறார். அவரது நடிப்பும் அருமையாக இருந்தது. சிவகார்த்திகேயன், யோகி பாபு இருவரின் காம்போ மிகவும் அறுமையாக இருந்தது. குறிப்பாக யோகி பாபு வரும் இடங்களில் எல்லாம் திரையில் சிரிப்பொலி.
அரசியல்வாதியாக இந்த படத்தில் களம் இறங்கி உள்ளார் மிஷ்கின். 2nd half-ல் நான் மிஷ்கினை திரையில் காண்பிக்கின்றனர். எதிர்பார்த்த அளவிற்கான காட்சிகள் மிஸ்கினுக்கு இல்லை.
வில்லன் என்று கூறுகையில் முத்திரை மட்டும் சொல்லி விட்டு விட முடியாது. மாவீரன் படத்தில் மிஸ்கின் தான் வில்லன் என்று டிரைலரை பார்த்த பின்பு நினைத்திருப்போம். ஆனால் படத்தின் முதல் பாதி இரண்டாம் பாதியில் மிஷ்கினுக்கு அடியாளாக வரும் மதனின் நடிப்பு அட்டகாசம். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் மிஷ்கினை விட படத்தில் அதிக ஸ்கோப் இருந்தது.
இசை ஒளிப்பதிவு பாடல்கள்:
மாவீரன் திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கும் இசை பொருத்தவரை பழமையும் புதுமையும் கலந்த ஒரு வித்தியாசம் இசையாக அமைந்திருக்கிறது.
பாடல்களைப் பொறுத்தவரை ஏற்கனவே வண்ணாரப்பேட்டையில் அப்புறம் சீனா பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. படத்தில் இந்த பாடல்களை பார்க்கும் போது நல்ல vibe இருந்தது. குறிப்பாக வா வீரா பாடலில் ஒலிக்கும் வைக்கோம் விஜயலட்சுமியின் குரல் மெய் சிலிர்க்க வைக்கிறது.
ஒளிப்பதிவை பொருத்தவரை சீனா பாடலில் இடம் பெற்றிருக்கும் காட்சிகள் அற்புதம். low angel-ல் காண்பிக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
சூப்பர் ஹீரோவின் குரல்:
சிவாவிற்கு வானத்தில் இருந்து கேட்கும் குரல் விஜய் சேதுபதியின் குரல் என ஏற்கனவே தெரிந்திருந்தாலும் எதற்காக இந்த குரலை படத்தில் வைத்திருப்பார்கள் என கேள்விகளும் ஆர்வமும் தோன்றியது. படம் முடிந்த பிறகும் இதே கேள்விதான் தோன்றுகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் படம் ஆரம்பிக்கும் பொழுது கமல்ஹாசனின் குரல் ஒலித்ததற்கு ஒரு காரணம் இருந்தது. அது ஒரு சரித்திர கதை என்பதால் பெரிய நடிகரின் குரலை வைத்து கதையை ஆரம்பித்துள்ளனர். ஆனால் இந்த படத்தில் குரலுக்கான ஒரு வேல்யூ இருந்தாலும் விஜய் சேதுபதி அளவிற்கு போக தேவை இல்லை. சாதாரண குரலை வைத்து எடுத்து இருந்திருக்கலாம்.
திரைக்கதை:
அரசியல் காமெடி காதல் என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி வைத்துள்ளது இந்த திரைக்கதை. முதல் பாதி விறுவிறு என்று போனாலும் இரண்டாம் பாதி வலவல என்று இருந்தது. மற்றபடி சிறுவர்கள் அனைவருக்கும் பிடித்த ஒரு படமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. நல்ல ஒரு சூப்பர் ஹீரோ கதையை முன்னிறுத்தி உள்ளார் முன்னிறுத்தி உள்ளார் இயக்குநர் மடோன் அஸ்வின்








