28.9 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சி புதிய பரிமாணங்களை எட்டியுள்ளது – பிரதமர்

கடந்த 3 ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சி புதிய பரிமாணங்களை எட்டியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஜம்மு-காஷ்மீரின் சம்பா பகுதியில் உள்ள பள்ளி என்ற கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது, டெல்லி-அமிர்தசரஸ்-கத்ரா விரைவுச்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜம்மு-காஷ்மீரில் வளர்ச்சியை விரைவுபடுத்தும் வகையில், 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் இன்று தொடங்கி வைப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அண்மைச் செய்தி: ஊராட்சிகளின் வளர்ச்சிக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – முதலமைச்சர்

மேலும், பஞ்சாயத்து ராஜ் தினத்தை ஜம்மு-காஷ்மீரில் கொண்டாடுவது ஒரு பெரிய மாற்றத்தை குறிக்கிறது என சுட்டிக்காட்டிய அவர், அடிமட்டத்தில் இருந்த ஜனநாயகம் மற்றும் வளர்ச்சியை மீட்டெடுத்ததில் ஜம்மு-காஷ்மீர் ஒரு புதிய முன்னுதாரணமாக திகழ்கிறது என குறிப்பிட்டார். மேலும், கடந்த 3 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி புதிய பரிமாணங்களை எட்டியுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading