#DevaraTrailer | ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவாரா’ திரைப்பட டிரெய்லர் எப்போது வெளியாகும்? வெளியான அப்டேட்!

‘தேவாரா’ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை (செப்.10) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. டோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு பின் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர்…

#DevaraTrailer | When is the trailer of 'Dewara'? Released Update!

‘தேவாரா’ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை (செப்.10) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

டோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு பின் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தேவாரா’. இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இதில் ஜான்வி கபூர், சைப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் மூலம் ஜான்வி கபூர் தென்னிந்திய திரையுலகில் கதாநாயகியாக கால் பதித்துள்ளார்.யுவசுதா ஆர்ட்ஸ்ட் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் மிக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் இறுதி கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில், இப்படத்தின் 3 பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன. இந்த திரைப்படம் வரும் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், ‘தேவாரா’ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை (செப்.10) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.