2026-ல் 200 தொகுதிகளில் வெற்றி – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!

2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகள் என்ற வெற்றி இலக்கை நோக்கி நடைபோடுவோம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். நாகையில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர்…

2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகள் என்ற வெற்றி இலக்கை நோக்கி நடைபோடுவோம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

நாகையில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;

“பெண்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என நினைத்தவர் கருணாநிதி. பெண்களுக்கு உள்ளாட்சியில் 50% ஒதுக்கீடு வழங்கியவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் ஏராளமான பெண்கள் தலைவர் பதவியில் உள்ளனர். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. பெண் கல்வியை ஊக்குவிக்க மாதம் ஆயிரம் ரூபாய் புதுமை பெண் திட்டத்தில் வழங்கப்படுகிறது.

இந்தியாவே திரும்பிப் பார்க்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில், ஒரு கோடியே 16 லட்சம் மகளிர் பயனடைகின்றனர். இந்த திட்டங்களை பல்வேறு மாநிலங்கள் பின்பற்றுகின்றன. காலமெல்லாம் தமிழ்நாட்டிற்கு உழைத்த கருணாநிதியின் பெயரை திட்டங்களுக்கு வைப்பதில், எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்று எரிச்சல் ஏற்படுகிறது.

வரும் சட்டமன்றத் தேர்தலில் 234க்கு 200 தொகுதி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைவரும் செயல்பட வேண்டும்” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.