30.5 C
Chennai
April 28, 2024
முக்கியச் செய்திகள் விளையாட்டு

டெல்லி கேபிடல்ஸ் அணி அபார வெற்றி

15வது ஐபிஎல்-ன் இன்றைய, 19-வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.

15-வது ஐபிஎல்-ன் 19-வது போட்டி பிரபார்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் களம்கண்டன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்குமுன்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது அதில் 9 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.

அதனைத்தொடர்ந்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதியது. அதில் 4 பந்துகள் மீதமிருக்கும் நிலையில், 3 விக்கெட்டுகள் எடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றிப்பெற்றது.

மேலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதியது. அதில் 33 பந்துகள் மீதமிருக்கும் நிலையில், 6 விக்கெட்டுகள் எடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிப்பெற்றது.

இதனைத்தொடர்ந்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் களம்கண்டன, இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 24 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதேபோல, மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதியது. அதில் 10 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.

அதனைத்தொடர்ந்து, டெல்லி கேபிடல்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது. அதில் 14 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.

இதேபோல, டெல்லி கேபிடல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதியது அதில், 2 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றிபெற்றது. இந்நிலையில், இன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

இதனைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர் முடிவில், 5 விக்கெட்டுகளுக்கு 215 ரன்களை எடுத்தது. இதனால்,  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 216 ரன்கள் வெற்றி இலக்காக அமைந்தது. அதனைத்தொடர்ந்து, பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.4 ஓவர் முடிவில் 171 ரன்களை மட்டுமே எடுத்ததால், டெல்லி கேபிடல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading