‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ பட இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு…!

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

கருப்பு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’.

வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ராதிகா, ரவீனா டண்டன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சித்தாரா எண்டர்டெய்ன்மன்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்திலிருந்து இதுவரையில் ‘பட்டாம்பூச்சி’ மற்றும் ‘வெட்டிங் சாங்’ ஆகியவை வெளியாகியுள்ளன. மேலும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2 ஆம் தேதி கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.