தருமபுரி அருகே ரத்து செய்த பட்டா மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுனர்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட காளிப்பேட்டை பகுதியில் 45 குடும்பங்கள் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதி மக்கள் தங்களது குடியிருப்பு பகுதிகளில் குடிநீர், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி பல முறை மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்து வந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் மனு அளித்து ஒரு மாத கால ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து காளிப்பேட்டை பகுதியை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
—கோ. சிவசங்கரன்