CUET-UGC தேர்வு முடிவுகள் வருகின்ற ஜூலை 17-ஆம் தேதி வெளியாகும்: யுஜிசி தலைவா் ஜகதீஷ் குமாா்..!!

‘இளநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகளுக்கான தகுதித் தோ்வு (க்யூட் – யுஜி) முடிவுகள் வருகின்ற ஜூலை 17-ஆம் தேதி அறிவிக்கப்படும்’ என்று பல்கலைக்கழக மானியக் குழு  தலைவா் ஜகதீஷ் குமாா் தெரிவித்துள்ளார்.  இளநிலை கலை-அறிவியல்…

‘இளநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகளுக்கான தகுதித் தோ்வு (க்யூட் – யுஜி) முடிவுகள் வருகின்ற ஜூலை 17-ஆம் தேதி அறிவிக்கப்படும்’ என்று பல்கலைக்கழக மானியக் குழு  தலைவா் ஜகதீஷ் குமாா் தெரிவித்துள்ளார். 

இளநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக தகுதித்  தோ்வு முடிவுகள் இந்த வாரத்தில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்பட்டது. இந்த நிலையில்,  ஜூலை 17-ஆம் தேதி  தேர்வு முடிவுகள் வெளியாகும் என யுஜிசி தலைவா் ஜகதீஷ் குமாா் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் உள்ள மத்திய பல்கலைகழகங்களில் சேர்வதற்கு  க்யூட்-யுஜி, க்யூட்-பிஜி தகுதி தோ்வுகள்  நடத்தப்பட்டு வருகிறது. தற்போது மத்திய பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி,  பல உயா் கல்வி நிறுவனங்களும் இந்த தோ்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையை நடத்துகிறது.  இந்தியா முழுவதும் சுமாா் 200க்கும் மேற்பட்ட உயா் கல்வி நிறுவனங்கள் இந்த நடைமுறையை பின்பற்றி மாணவர் சேர்க்கையை நடத்துகிறது.

இந்த நிலையில், இந்தாண்டிற்கான க்யூட்-யுஜி தோ்வு முடிவுகள் ஜூலை 17ல்  வெளியாக உள்ளன. இதுகுறித்து யுஜிசி தலைவா் ஜகதீஷ் குமாா் தெரிவித்ததாவது..

இந்தாண்டு  க்யூட்-யுஜி தோ்வு எழுத 14 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக யுஜிசி தெரிவித்தது. இந்த் எண்ணிக்கை கடந்த ஆண்டு பங்கேற்றவா்களைக் காட்டிலும் 41 சதவீதம் அதிகமாகும். தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத் தாள்கள் திருத்தப்பட்ட நிலையில்  இந்தப் பணிகள் நிறைவடைந்துள்ளன. அந்த வகையில், தோ்வு முடிவுகளை தேசிய தோ்வுகள் முகமை வரும் ஜூலை 17 ம் தேதி அறிவிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.