கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் லீக் ஆட்டத்தில் சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளது.
கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய ஐபிஎல் சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதில், இதுவரை 21 லீக் ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இன்றைய போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடுகின்றன.
சிஎஸ்கே இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் இரண்டில் வென்று, புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் நீடிக்கிறது. கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்ற சென்னை அணி, ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க முனைப்பு காட்டுகிறது. அதேநேரம், கொல்கத்தா அணியோ விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியிலும் வென்று முதலிடத்திற்கு முன்னேற தீவிரமாக உள்ளது. எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளார். ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 18 முறையும், கொல்கத்தா அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.
🚨 Toss Update 🚨@ChennaiIPL win the toss & elect to field against @KKRiders
Follow the Match ▶️ https://t.co/5lVdJVscV0#TATAIPL | #CSKvKKR pic.twitter.com/l0uaAhGnob
— IndianPremierLeague (@IPL) April 8, 2024
கொல்கத்தா அணிக்கு எதிராக ஒரு போட்டியில் சென்னை அணி அதிகபட்சமாக 225 ரன்களையும், குறைந்த பட்சமாக 114 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், சென்னை அணிக்கு எதிராக ஒரு போட்டியில் கொல்கத்தா அணி அதிகபட்சமாக 202 ரன்களையும், குறைந்த பட்சமாக 108 ரன்களையும் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.