CSK vs RR: 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி!

ராஜஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி தொடரை வென்றது. 16வது ஐபில் போட்டிகள் கடந்த மாதம் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில்…

ராஜஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி தொடரை வென்றது.

16வது ஐபில் போட்டிகள் கடந்த மாதம் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், மற்ற பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ‘டாப்-4’ இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

அந்த வகையில் இன்று சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். 2 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 24 ரன்கள் சேர்த்தது. 26 பந்துகளில் அரைசதம் விளாசி ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அசத்தினார்.

நிதானமாக  விளையாடிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் பட்லர், ஜடேஜா பந்துவீச்சில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 11 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 104 ரன்கள் குவித்தது. பின்னர் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 17 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 77 ரன்களில் துஷார் தேஷ்பாண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

17வது ஓவரில் தீக்சனா வீசிய பந்தில் போல்டாகி ராஜஸ்தான் அணியின் ஹெட்மயர் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றிபெற 203 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

4 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் சேர்த்தது. 16 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர் கான்வே ஆட்டமிழந்தார். 9 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 68 ரன்கள் சேர்த்தது. சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 47 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். சென்னை அணி 11 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 73 ரன்கள் மட்டுமே எடுத்தது.

14. ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது. கடைசி 2 ஓவர்களில் சென்னை அணி வெற்றிபெற 46 ரன்கள் தேவை என்றிருந்த நிலையில் ராஜஸ்தான் 32 ரன்கள் வித்த்யாசத்தில் சென்னையை வீழ்த்தி தொடரை வென்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.