இந்தியாவில் ஏ ஒய். 4.2 கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளது. தற்போது 17 பேருக்கு இந்த வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏஒய். 4.2 கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 17 பேருகு இந்த வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. AY.4.2 என்பது கொரோனா தொற்று ஏற்பட காரணமான SARS-CoV-2 வைரஸ்லின் டெல்டா மாறுபாடின் துணை பரம்பரையாகும். இந்த புதிய வகை வேரியண்ட் மிகவும் பரவக்கூடியதாக இருக்கலாம் என்றும் ஆனால் இது ஆபத்தானது இல்லை என்றும் கூறப்படுகிறது.
ஆனால் இந்த வகை வேரியண்ட் தொடர்பாக ஆய்வுகள் நடத்தினால் மட்டுமே இதன் பரவும் தன்மைகள் பற்றி கண்டறிய முடியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டிருப்பது ஆய்வாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.







