ஏ.ஆர். ரஹ்மான் மீது பதிப்புரிமை மீறல் வழக்கு – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஏ.ஆர்.ரஹ்மான் மீது தொடரப்பட்ட பதிப்புரிமை வழக்கில் ரூ. 2 கோடி செலுத்த அவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆஸ்கர் விருது பெற்ற புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கு இசையமைத்தார். இந்த இரு படங்களின் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் உள்ள ‘வீர ராஜா வீரா’ பாடல் தனது தாத்தா மற்றும் தந்தை ஆகியோர் இயற்றிய சிவா ஸ்துதி என்ற பாடல் என்று இந்திய பாரம்பரிய பாடகர் ஃபயாஸ் வாசிஃபுதீன் தாகர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பதிப்புரிமை மீறல் வழக்கு தொடர்ந்திடிருந்தார்

இந்த வழக்கு இன்று(ஏப்.25) விசாரணைக்கு வந்தபோது, பொன்னியின் செல்வன் படத்தின் வீரா ராஜா வீரா பாடல் சிவா ஸ்துதி பாடலைப் போலவே உள்ளது என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது, ரூ. 2 கோடி தொகையை டெல்லி உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் சிவா ஸ்துதி பாடலால் ஈர்க்கப்பட்டு அதன் உந்துதலால் ‘வீர ராஜா வீரா’ பாடலை இயற்றப்பட்டதாக ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டதாக உத்தரவிnபோது நீதிமன்றம் பதிவு செய்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.