மக்களவை தொடங்கியதுமே எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்ட நிலையில் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான, ஒரே நாடு ஒரே தேர்தல் திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் (டிச.17) தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசனம் பற்றிய 2 நாள் விவாதத்தின் முடிவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் பேசினார். அவர் பேசும்போது, அம்பேத்கரை பற்றி சர்ச்சையாக பேசினார் என கூறப்படுகிறது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : #GoldRate | தங்கம் வாங்க ரெடியா மக்களே… தொடர் சரிவில் தங்கம் விலை!

இதற்கிடையே, மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து நேற்று (டிச.18) நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நேற்று அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நேற்று நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து 11 மணியளவில் இன்று அவை தொடங்கயிது. அவை தொடங்கியதுமே அம்பேத்கரை அவமதித்த மத்திய அமைச்சர் அமித்ஷா மன்னிப்புக் கேட்க வேண்டும் என மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர். தொடர் அமளியில் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.







