மேகாலயா முதலமைச்சராக பொறுப்பேற்றார் கான்ராட் சங்மா

மேகாலயாவின் புதிய முதலமைச்சராக தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா பொறுப்பேற்றுக் கொண்டார். இந்தியாவின்  வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு  கடந்த ஜனவரி…

மேகாலயாவின் புதிய முதலமைச்சராக தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்தியாவின்  வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு  கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. மேகாலயாவில் சோகியாங் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட இருந்த ஐக்கிய ஜனநாயக கட்சி (யுடிபி) வேட்பாளர்  மாரடைப்பினால் காலமானதால் 59 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் 85.17 சதவீத வாக்குகள் பதிவாகின.


நடந்த வாக்கு எண்ணிக்கையில் தேசிய மக்கள் கட்சி  26 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தல 5 இடங்களில் வெற்றி பெற்றது. பிறகட்சிகள் 10 இடங்களில் வெற்றி பெற்றனர்.எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் இழுபறி நீடித்தது. இந்நிலையில் ஆட்சி அமைக்க ஆதரவு தரும்படி பாஜகவிடம் தேசிய மக்கள் கட்சி தலைவர் கான்ராட் சங்மா கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து 2 இடங்களில் மட்டும் வென்ற பாஜக மேகாலயாவில் ஆட்சி அமைக்க ஆதரவு கடிதம் வழங்கியது. இந்த நிலையில் மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி தலைவரும் முதல்வருமான கான்ராட் சங்மா ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இதனையும் படியுங்கள்: ஆட்சியை அகற்ற சதி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு!

இந்த நிலையில் இன்று சில்லாங்கில் கான்ரார்ட் சங்கமா முதலமைச்சராக பதவியேற்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் வட கிழக்கு மாநிலங்களின் பொறுப்பாளரும் அஸ்ஸாம் மாநில முதல்வருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜேபி.நட்டா ஆகியோர் பங்கேற்றனர்.

இரண்டு துணை முதலமைச்சர்கள் உட்பட 12 அமைச்சர்களுக்கு மேகாலயா ஆளுநர் பாகு சவுஹான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கான்ரார்ட் சங்கமா முதலமைச்சராகவும், டின்சாங் மற்றும் ஸ்னியாவ்பலாங் தார் ஆகியோர துணை  முதல்வர்களாகவும்  பதவியேற்றனர். புதிய அமைச்சரவையில் பாஜகவின் ஏஎல் ஹெக் இடம்பெற்றுள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களில் தோன்றிய கட்சிகளில் தேசிய கட்சி என்கிற தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ள ஒரே கட்சி தேசிய மக்கள் கட்சி. முன்னாள் மக்களவை சபாநாயகர் பி.ஏ சங்மாவால் கடந்த 2013ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த கட்சியை அவரது மறைவுக்கு பின்னர் அவருடைய மகன் கான்ராட் சங்கமா வழிநடத்தி வருகிறார். இவர் வார்ட்டன் பல்கலைக்கழகத்தில் பிபிஏ பட்டமும்,  லண்டன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றவர். இந்தியாவில் மிக குறைந்த வயதுடைய முதலைமச்சர் என்ற பெருமையை சங்மா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.