திரு.மாணிக்கம் படத்துக்கு நடிகர் #Rajinikanth வாழ்த்து!

திரு.மாணிக்கம் படத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் திரு.மாணிக்கம். இந்த படத்தில் சமுத்திரக்கனியுடன் இணைந்து அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி,…

Congratulations to actor #Rajinikanth for the film Thiru.Manickam!

திரு.மாணிக்கம் படத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் திரு.மாணிக்கம். இந்த படத்தில் சமுத்திரக்கனியுடன் இணைந்து அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த டிச.27 ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், ‘திரு.மாணிக்கம்’ படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,

“ஒரு நல்ல படத்துக்கு அடையாளம், படம் பார்த்த பிறகு அதில் வரும் காட்சிகள், கதாபாத்திரங்கள் ஒரு 3,4 நாட்களுக்காவது நினைவில் வந்துகொண்டே இருக்கணும். அந்த படத்தில் வரும் எதாவது ஓர் நல்ல விஷயம், நம் வாழ்க்கையில் நாமும் கடைபிடிக்கணும் என்ற எண்ணம் உருவாகணும். அது போன்று சமீபத்தில் நான் பார்த்த திரு.மாணிக்கம் என்கிற படம் ஓர் அற்புதமான படைப்பு. உண்மை சம்பவத்தைவைத்து திரைக்கதை, வசனத்தை எழுதி சிறப்பாக இயக்கியிருக்கும் நந்தா பெரியசாமி, தான் ஓர் அற்புதமான இயக்குனர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

திரையுலகில் அவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. திரைப்படம் இவ்வளவு சிறப்பாக உருவாக பணியாற்றியிருக்கும் மைனா சுகுகுமார். விஷால் சந்திரசேகர், குணா ரகு ஆகியோருக்கும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் சமுத்திரக்கனி, பாரதிராஜா மற்றும் அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் இந்த படத்தை தயாரித்திருக்கும் G.P.ரவி குமார் மற்றும் லிங்குசாமி மற்றும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்”

இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் அதில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.