தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ஜூலை 18-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், விளாத்திக்குளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து ஜூலை 20-ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. இதனையடுத்து மார்க்கண்டேயன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவையும் நீதிமன்ற ஜூலை 22-ஆம் தேதி நிராகரித்தது.
இதனயடுத்து மார்க்கண்டேயன் ஜாமீன் கோரி மீண்டும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவையும் நிதிமன்றம் நிராகரித்தது, இந்த நிலையில் மார்க்கண்டேயன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரனைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், “அவதூறு கருத்துக்களை இனி கூறமாட்டேன் என உறுதியளிக்க வேண்டும், தூத்துக்குடி காவல் இலையத்தில் நாள்போறும் கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளோடு விளாத்திக்குளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு ஜாமீன் வழங்கினர்.




