நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கொடிகட்டிப் பறந்து
வருபவர். பல்வேறு பிரச்னைகளுக்கு பிறகு தற்போது மீண்டும் திரைப்படங்களில்
நடித்து வருகிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும்
மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தின்
படப்பிடிப்பு மைசூரில் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்
இந்த படப்பிடிப்பு தளத்தில் வடிவேலு, லாரன்ஸ் மற்றும் ராதிகா சரத்குமார்
ஆகியோர் பேசிக்கொண்டு இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
அதனை ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்
நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்த சுறா படத்தில் வடிவேலு நடித்த தனது காமெடி காட்சியை நடித்துக் காட்டினார். அவரது நடிப்பை பார்த்து லாரன்ஸ் குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை நடிகை ராதிகா சரத்குமார் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தில் வடிவேலுவின் காமெடி பெரிதும் ரசித்துப் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.







