கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அவரது பெற்றோர் முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் செம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவிக்கு கடந்த ஒரு ஆண்டுகளாக உடல் நலம் சரியில்லாத நிலையில், அவரது பெற்றோர்கள் மாணவியை பூண்டி அடுத்த வெள்ளாத்து கோட்டை பகுதியில் ஆசிரமம் நடத்திவரும் சாமியார் முனுசாமியிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சாமியார் கல்லூரி மாணவிக்கு நாக தோஷம் இருப்பதாக கூறி, ஓர் ஆண்டுகள் ஆசிரமத்திலேயே தங்க வைத்து நள்ளிரவு பூஜைகளில் பங்கேற்க வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 14ம் தேதி உயிரிழந்த மாணவி இறப்பின் மீது சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் சாமியார் முனுசாமி கைது செய்யப்பட்டாலும், உரிய முறையில் விசாரணை நடைபெறவில்லையென்றும், தன்னிடமே ரூ.5 லட்சம் பேரம் பேசி புகாரை திருபம்ப பெற சொல்வதாகவும் மாணவி தாயர் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.
தனது மகளுக்கு நியாயம் வேண்டும் என்றும், தலைமைச்செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் மனு அளித்து வெளியே வந்த அவரது பெரியம்மா சாலையில் அமர்ந்து கதறி அழுதார். கஷ்டபட்டு பெற்று வளர்த்த தனது மகளை இப்படி செய்துவிட்டதாக புலம்பினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாணவியின் பெரியம்மா இந்திராணி, சாமியார்தான் தனது மகளை எதோ ஒரு வகையில் இறப்புக்கு தூண்டியதாகவும் ஆசிரம சாமியார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், இன்னும் 20க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆசிரமத்தில் உள்ளதாகவும் அவர்களை காப்பாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், பல புகார்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றும், முதலமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க புகார் அளித்ததாக உயிரிழந்த மாணவியின் பெரியம்மா கண்ணீர் மல்க தெரிவித்தார்