31.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் சினிமா

கோப்ரா திரைப்படத்தின் காட்சிகள் நீக்கம் – காரணம் என்ன தெரியுமா?

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் திரையரங்கில் வெளியாகி உள்ள கோப்ரா திரைப்படத்தின் 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக படக் குழு அறிவித்துள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம், நடிப்பில் கோப்ரா திரைப்படம் வெளியாகி உள்ளது. இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்னாளினி ரவி, மீனாட்சி, இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் விநாயகர் சதுர்த்தியான நேற்று அதிகாலை சிறப்புக் காட்சியுடன் திரையரங்குகளில் வெளியானது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடைசியாக விக்ரம் நடிப்பில் கடாரம் கொண்டான் திரைப்படம் வெளியாகியிருந்தது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகிய நடிகர் விக்ரமின் படம் என்பதால், கோப்ரா படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள், அவர்களது எதிர்பார்ப்பை கோப்ரா பூர்த்தி செய்யவில்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மூன்று மணி நேரம், மூன்று நிமிடம், மூன்று வினாடிகள் கோப்ரா படத்தின் நீளமாக இருந்த நிலையில் திரைப்படம் வெளியாகி ரசிகர் மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இதன் காரணமாக தற்போது படத்தில் 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மாலை முதல் படம் வெளியாகும்போது அதன் நீளம் குறைக்கப்பட்டு வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading