சென்னை அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் கிளாம்பாக்கத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு திறந்து வைக்கிறார்.
திறப்பு விழாவுக்கு வருகை தரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆலந்தூர் முதல் வண்டலூர் வரை உற்சாக வரவேற்பு அளிக்க திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.







