ஓடையில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!

ஓடையில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

கடலூர் அருகே நேற்று (ஏப்.14) ஓடையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரணம் அளித்துளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

“கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டம், வடக்கு கொளக்குடி கிராமம், ஜாகிர் உசேன் நகரைச் சேர்ந்த ஷேக் அப்துல் ரஹ்மான் (வயது 13) த/பெ.சாதிக் பாஷா, முகமது ஹபில் (வயது 10) த/பெ.ஜாஃபர் சாதிக் மற்றும் உபையதுல்லா (வயது 9) த/பெ.முஜிபுல்லா ஆகிய 3 சிறுவர்கள் நேற்று (14.4.2025) மாலை 4,00 மணியளவில் கொல்லிமலை கீழ் பாதி கிராம எல்லையில் உள்ள வெள்ளியங்கால் ஓடையில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக மூன்று சிறுவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.