உடல்நலக்குறைவு காரணமாக மேற்கொள்ளாமல் இருந்த உடற்பயிற்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தொடங்கியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடல் நலம் பேணும் வகையில், நடைபயிற்சி, மிதிவண்டி பயிற்சி, உடற்பயிற்சியினை மேற்கொண்டு வருகிறார். உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளித்து வரும் அவர் மிதிவண்டி பயிற்சியின்போது சுமார் 20 முதல் 30 கிலோ மீட்டர் தொலைவிற்கு பயணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்காக வீட்டிலேயே உடற்பயிற்சிக் கூடம் வைத்துள்ளார். இதனிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றுக்கு பிறகு சளி, காய்ச்சல் காரணமாக உடல் சோர்வுற்ற நிலையில் இருந்ததால், உடற்பயிற்சிகள் மேற்கொள்ளாமல் இருந்தார்.
இந்நிலையில், கொரோனா தொற்றுப் பரவலிலிருந்து அவர் முழுமையாக விடுபட்டுள்ள நிலையில் மீண்டும் உடற்பயிற்சிகளை தொடங்கியுள்ளார்.வழக்கமான உடற்பயிற்சிகளை மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
-இரா.நம்பிராஜன்