சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார் .  தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கவும், புதிய நிறுவனங்களை வரவேற்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த…

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார் . 

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கவும், புதிய நிறுவனங்களை வரவேற்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜன. 27ஆம் தேதி ஸ்பெயின் புறப் பட்டுச் சென்றார். அங்கு நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர், முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத் தார். பிறகு நடைபெற்ற சந்திப்பு களின்போது, பிரபலமான ஹபக் லாய்டு நிறுவனத்துடன் ரூ.2,500 கோடி முதலீட்டுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

சாலை கட்டமைப்பு மேம் பாட்டு நிறுவனமான அபர்ட்டி ஸின் பன்னாட்டு மற்றும் நிறு வனத் தொடர்பு தலைமை அதி காரி லாரா பெர்ஜானோ, முதல மைச்சர் மு.க.ஸ்டாலினை சந் தித்து பேசினார். அப்போது, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை கட்டமைப்பில் முதலீடுகளை மேற் கொள்ள அபர்ட்டிஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்தது. ரோக்கா நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்வதாக உறுதி அளித்துள்ளது.

ஆக்சியானா நிறு வனமும் முதலீடு செய்ய உறுதி அளித்தது. தொடர்ந்து, அம்போ வால்வ்ஸ் உள்ளிட்ட சில நிறுவ னங்களுடன் முதல்வர் பேச்சு வார்த்தை நடத்துகிறார். இந்த நிறுவனங்களும் விரைவில் ஒப் பந்தம் மேற்கொள்ள உள்ளன. ஸ்பெயின் பயணத்தை முடித் துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது சென்னை திரும்பியுள்ளார். அவரை திமுக நிர்வாகிகள் வரவேற்க, நேரில் சென்று வரவேற்றனர்.

இந்நிலையில், மு க ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.

முதல்வர் மு க ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டிற்கு திரும்ப உள்ளேன். சிறப்பான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்ட ஸ்பெயினில் உள்ள இந்திய தூதரகத்திற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்பெயினில் தமிழ் சமூகத்தினரை சந்தித்தது நினைவுகளின் பொக்கிஷமாக இருக்கும். மறக்க முடியாத நினைவுகளை ஸ்பெயின் நாட்டினரும் அங்குள்ள தமிழர்களும் அளித்தனர். இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

 

https://twitter.com/mkstalin/status/1754883438358720674

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.