தலைமை வழக்கறிஞராகிறார் பி.எஸ்.ராமன் – ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு பரிந்துரை!

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ். ராமனை நியமிக்க,  ஆளுநருக்கு அரசு பரிந்துரை செய்ததுள்ளது.  தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த சண்முகசுந்தரம் இன்று ராஜிநாமா செய்தார்.  ஆளும் திமுக அமைச்சர்களுக்கு எதிரான பல்வேறு…

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ். ராமனை நியமிக்க,  ஆளுநருக்கு அரசு பரிந்துரை செய்ததுள்ளது. 

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த சண்முகசுந்தரம் இன்று ராஜிநாமா செய்தார்.  ஆளும் திமுக அமைச்சர்களுக்கு எதிரான பல்வேறு சொத்து குவிப்பு வழக்குகள் அடுத்தடுத்து விசாரணைக்கு வர உள்ள நிலையில் இவரின் ராஜிநாமா முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பதவியை ராஜிநாமா செய்வதாக சண்முகசுந்தரம் அனுப்பிய கடிதத்தை ஏற்றுக் கொண்ட,  அரசு பி.எஸ் ராமன் பெயரை அந்த பதவிக்கு பரிந்துரை செய்துள்ளது.  இது தொடர்பான கோப்பு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞரான பி.எஸ் ராமன் தமிழக அரசின் பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜராகி வாதாடி வருகிறார்.  ஆளுநரின் ஒப்புதல் கிடைத்த பிறகு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.