சென்னை – திருவள்ளூர் செல்லும் மின்சார ரயில் ரத்து!

சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூருக்கு இயக்கப்படும் மின்சார ரயில் வரும் ஜூன் 19, 20 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.  சென்னை சென்ட்ரல் – திருவள்ளூர் இடையே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் ரயில்…

சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூருக்கு இயக்கப்படும் மின்சார ரயில் வரும் ஜூன் 19, 20 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. 

சென்னை சென்ட்ரல் – திருவள்ளூர் இடையே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

திருவள்ளூர் பணிமனையில் ஜூன் 19, 20 ஆகிய தேதிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளவுள்ளதால் அதிகாலை இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், சென்னை சென்ட்ரலில் (மூர் மார்க்கெட் வளாகம்) அதிகாலை 4.30 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும், மறுமார்க்கமாக திருவள்ளூரில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும் ஜூன் 19, 20 தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.