சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில், செக்
குடியரசை சேர்ந்த 17வயதான லிண்டா ஃப்ருவிர்டோவா, காலிறுதிக்கு
முன்னேறியுள்ளார்.
2 வது சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 130வது இடத்தில் உள்ள செக்குடியரசின்
லிண்டா ஃப்ருவிர்டோவா (linda fruhvirtova), உலக தரவரிசையில் 95வது இடத்தில்
உள்ள ஸ்வீடனின் ரெபெக்கா பீட்டர்சனை (rebecca peterson) எதிர்கொண்டார்.
இதில், தொடக்கம் முதலே தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிண்டா, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகளின் இரண்டாம் சுற்று ஆட்டம் நடந்தது. மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சென்டர் கோர்ட் ஆடுகளத்தில் ஸ்வீடன் வீராங்கனை ரெபேக்கா பீட்டர்சன், செக் குடியரசின் லிண்டா ஃப்ருஹ்விர்டோவாவை எதிர்கொண்டார்.
முதல் சுற்றை 6-4 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். இதையடுத்து, 2வது செட்டையும் 6-2 என்ற எளிய கணக்கில் அவர் கைப்பற்றினார்.








